மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்முறையாக காஷ்மீரில் சர்வதேச திரைப்பட விழா!

காஷ்மீரில் தொடங்கியது முதல் சர்வதேச திரைப்பட விழா...

Published On :7 செப்டம்பர் 2026, 4:30 pm IST

காஷ்மீரில் முதல்முறையாக சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது.

உலக அளவில் திரைத்துறை என்னென்ன கதைகளை எப்படியெல்லாம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு திரையரங்கங்கள் மற்றும் ஓடிடிகள் மட்டும் சாட்சியாக இருப்பதில்லை. இவற்றைத்தாண்டி கருத்து சுதந்திரத்திற்கு, தணிக்கையில்லாத படங்களுக்குமான இடமாக திரைப்பட விழாக்கள் இருக்கின்றன.

பெர்லின், ரோட்டர்டம் உள்பட பிரபலமான திரைவிழாக்கள் இருந்தாலும் ஒவ்வொரு நாடும் பண்பாடு மற்றும் கலை வளர்ச்சித்துறை சார்பாக சிறிய அளவில் சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்துகின்றனர். கோவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா இந்தியாவின் முதன்மையான திரைவிழாவாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சுதந்திரம் காலம் தொட்டு காஷ்மீரில் நிலவிவந்த பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அங்கு கலை விழாக்கள் மற்றும் சர்வதேச பண்பாட்டு நிகழ்வுகள் அரிதாகவே நடைபெற்றன. கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீரில் பாதுகாப்பு உறுதி மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளன. தற்போது, முதல்முறையாக காஷ்மீரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த விழா செப். 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில், பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குநர் சந்தோஷ் சிவன், ஜெர்மன் திரைப்படத் தயாரிப்பாளர் டோரதி வென்னர், தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் கல்வியாளருமான ஹிமான்சு சேகர் கதுவா, ஜப்பானிய ஊடகத் தொழில்முனைவோரும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான கெய்கோ பாங் மற்றும்ஆகியோர் அடங்கிய சர்வதேச நடுவர் குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.

An international film festival has begun in Kashmir for the first time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.