மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திரையரங்குகளில் 50-வது நாளை நிறைவு செய்த மண்டாடி!

மண்டாடி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது...

Published On :29 அக்டோபர் 2026, 4:50 pm IST

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் திரையரங்குகளில் 50-வது நாளை நிறைவு செய்துள்ளது.

நடிகர் சூரியின் நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படம் கடந்த செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படம் ரூ. 170 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் பிளாக்பஸ்டர் பட்டியலில் இடம்பிடித்தது.

சூரியுடன் நடிகர்கள் சுஹாஸ், சத்யராஜ், மஹிமா நம்பியார் ஆகியோரின் நடிப்பும் பேசப்பட்டது. கடலோடிகளின் வாழ்க்கையுடன் படக்குப்போட்டிகளைக் காட்சிப்படுத்திய விதத்தாலும் விமர்சன ரீதியாகவும் இப்படம் பாராட்டுகளைப் பெற்றது.

Story image

மேலும், மண்டாடி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் இந்தியத் திரைப்படங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. இந்த நிலையில், திரையரங்குகளிலேயே இப்படம் 50-வது நாளை இன்றுடன் நிறைவு செய்துள்ளது. தயாரிப்பாளருக்கு மட்டுமல்லாது திரையரங்க உரிமையாளர்களுக்கும் நல்ல லாபத்தைக் கொடுத்த திரைப்படமாகியுள்ளது.

Actor Soori's film 'Mandaadi' has completed 50 days in theatres.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.