மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

கிரைம் த்ரில்லர் படத்தில் நாயகனாக நடிக்கும் சென்னை 600028 நடிகர்!

இனிகோ பிரபாகர் நாயகனாக நடிக்கும் மின்னும் ஓர் இரவு படம் குறித்து...

inigo prabhagar

மின்னும் ஓர் இரவு படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ்

Published On :28 அக்டோபர் 2026, 3:40 pm IST

டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்‌ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ள 'மின்னும் ஓர் இரவு' திரைப்படத்தை சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இனிகோ பிரபாகர் பிரதான வேடத்தில் நடித்துள்ள 'மின்னும் ஓர் இரவு' உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் நவம்பர் மாதம் வெளியாகிறது.

மேலும் இந்தப் படத்தில், அஞ்சு கிருஷ்ணா அஷோக், சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'மின்னும் ஓர் இரவு' திரைப்படத்திற்கு சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை எஸ்.என். பாசில் கையாண்டுள்ளார்.

ஒர் இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் பாணியில் 'மின்னும் ஓர் இரவு' திரைப்படம் எடுக்கப்பட்டுள்லது.

இரவுப் பொழுதை உற்சாகமாகக் கடக்க காட்டுப் பகுதிக்குள் செல்லும் நண்பர்கள், மிகப்பெரிய அதிர்ச்சிகரமான சம்பவங்களில் சிக்குகின்றனர். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதே படத்தின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் இனிகோ பிரபாகர் சாக்லெட், ஜி, சென்னை 600028, சுந்தரபாண்டியன், ஆர்கே நகர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The film 'Minnum Oor Iravu', produced by Dr. P. Robert Raj under his banner S.P. Robert Productions, has been directed by Sivaprabhu Selvaraj.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.