தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஹார்ட் பீட் நடிகை நடிக்கும் புதிய தொடர் மேடம் போலீஸ்!

திவ்யா கணேஷ் - பிரேமிகா சேகர் இணைந்து நடிக்கும் மேடம் போலீஸ் தொடர்.

madam police

மேடம் போலீஸ் தொடர் - படம்: விடியோ கிளிப்

Published On :26 அக்டோபர் 2026, 3:17 pm IST

பிக் பாஸ் பிரபலம் திவ்யா கணேஷ் மற்றும் ஹார்ட் பீட் இணையத் தொடர் நடிகை பிரேமிகா சேகர் ஆகியோர் மேடம் போலீஸ் என்ற புதிய தொடரில் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

காவல் நிலையம் மற்றும் காவலர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

ஜியோ ஹாட்ஸ்டாரில் போலீஸ் போலீஸ் இணையத் தொடர் ரசிகர்களிடையே பிரபலமடைந்து, தற்போது இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஆஹா ஓடிடியில் தூள் பேட் போலீஸ் ஸ்டேசன் இணையத் தொடரும் ரசிகர்கள் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், சோனி விழா சேனலில் மேடம் போலீஸ் என்ற புதிய தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் மேடம் சார் என்ற ஹிந்தி மொழி தொடரின் தழுவலாக எடுக்கப்படுகிறது.

பிக் பாஸ் பிரபலம் திவ்யா கணேஷ் மற்றும் ஹார்ட் பீட் இணையத் தொடர் நடிகை பிரேமிகா சேகர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

நகைச்சுவை பாணியில் எடுக்கப்படும் மேடம் போலீஸ் தொடரின் ஒளிபரப்பு தேதி, ஒளிபரப்பு நேரம் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை திவ்யா கணேஷ் பாக்கியலட்சும், அன்னம், மகாநதி உள்ளிட்ட தொடர்களிலும் நடிகை பிரேமிகா சேகர் ஹார்ட் பீட் தொடரில் சிந்து பாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Bigg Boss fame Divya Ganesh and 'Heartbeat' web series actress Premika Sekar are playing lead roles in a new series titled 'Madam Police'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.