மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

5 ஆண்டு பயணம்! 1555 நாள்களுடன் நிறைவடைந்த கயல் தொடர்!

1555 நாள்களுடன் நிறைவடைந்த கயல் தொடர் குறித்து...

kayal serial

கயல் தொடர் நடிகர்கள். - படம்: இன்ஸ்டாகிராம்

Published On :25 அக்டோபர் 2026, 2:38 pm IST

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த கயல் தொடர், 1555 நாள்களுடன் நிறைவடைந்தது.

கடந்த 2021 அக். 21 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த கயல் தொடர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றும் டிஆர்பியில் முன்னணியிலும் இருந்து வந்தது.

எப்போதும் டிஆர்பியில் முதல் 3 இடங்களைப் பிடித்து ரசிகர்களின் ஆதரவுடன் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வந்தது. 5 ஆண்டுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வந்த கயல் தொடர் 1555 எபிசோடுகளுடன் நேற்று (அக். 24) நிறைவடைந்தது.

இந்தத் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, ஷியாம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வந்தனர். இந்தத் தொடரை பி. செல்வம் இயக்கி வந்தார்.

தந்தையை இழந்த கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணுக்கு வரும் அனைத்து தடைகளையும் எப்படி தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதை மையப்படுத்தி கயல் தொடர் எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, கதையின் நாயகன் மற்றும் நாயகி, சஞ்ஜீவ் மற்றும் சைத்ரா ரெட்டி இணைவதுபோல கிளைமேக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டு நிறைவடைந்தது.

தற்போதுள்ள சூழலில், தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே முடிக்கப்படும் நிலையில், 5 ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது கயல் தொடரின் பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

கயல் தொடர் நிறைவடைந்த நிலையில், நாளை (அக். 26) முதல் அன்னம் தொடர் இரவு 6.30 முதல் 7.30 வரை ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் பைரவி என்ற புதிய தொடர் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

Summary

The Kayal series, which was aired on Sun TV, ended after 1555 days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.