மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தார்! நடிகை அசினுக்கு இவ்வளவு பெரிய மகளா?

நடிகை அசின் தன்னுடைய மகள் பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அசின் மகள்

அசின் மகள் - insta

Published On :24 அக்டோபர் 2026, 11:23 am IST

கஜினி நடிகை அசின், தன்னுடைய மகள் அரின் ராய்ன் 9வது பிறந்த நாளை, ஜப்பானில் கோலாகலமாகக் கொண்டாடியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்கள் மற்றம் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகை அசின், 2016ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார்.

திரைத்துறையின் உச்சத்தில் இருந்த நடிகை அசின், ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டு, சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். பிறகு பெரிய அளவில் அவர் பொது வெளிக்கு வரவில்லை.

தற்போது ஜப்பானில் நடைபெற்ற தன்னுடைய மகள் அரின் 9வது பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை ஹசின் பகிர்ந்துள்ளார். நடிகைக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று அவரது ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

ஆனால், மகளின் புகைப்படங்களை பதிவேற்றியிருக்கும் அசின், தன்னுடைய படங்களை பதிவேற்றவில்லை. அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அவரது புகைப்படம் ஒன்றும் பதிவிடப்படாமல்தான் உள்ளது.

ஜப்பானில் பல்வேறு கலைகளைக் கற்கும் புகைப்படங்களும் கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

அரின் ராய்ன் பெயருக்கு அர்த்தம் பற்றியும் ஏற்கனவே அசின் விளக்கியிருந்தார். அதில், அரின் ராய்ன் பெயருக்கான அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் இங்கே சொல்ல விரும்புகிறேன், அரின் ராய்ன் (Arin Rayn). இந்தப் பெயர் - அதாவது முதல் பெயர் மற்றும் குடும்பப் பெயர் ஆகிய இரண்டும், ராகுல் மற்றும் எனது பெயர்களின் கலவையாகும். ‘ரெய்ன்’ (Rayn) என்பதை ‘ரா-இன்’ (Ra-in) என்று உச்சரிக்க வேண்டும், ஆனால் எழுதும் விதத்தில் ஒரு சிறிய மாற்றம் உள்ளது. இது ஒரு சுருக்கமான, எளிமையான பெயர்; எந்த ஒரு குறிப்பிட்ட பாலினத்தையும் சாராதது, மதச்சார்பற்றது, மதம், சாதி மற்றும் ஆணாதிக்கக் கருத்துகளுக்கு அப்பாற்பட்டது என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

She shared some happy news! Does actress Hasin have such a grown-up daughter?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.