ஜோஜு ஜார்ஜின் பரிபாடி அப்டேட்!

பரிபாடி திரைப்படத்தின் அப்டேட் குறித்து....

Published On :22 அக்டோபர் 2026, 3:32 pm IST

நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி வரும் பரிபாடி திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி, நடித்த திரைப்படமான பணி பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. ஆக்‌ஷன் பின்னணியில் உருவான படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கிளைமேக்ஸ் ஆகியவை ரசிகர்களைத் திருப்திபடுத்தியதால் படம் மலையாளம் மற்றும் தமிழிலும் வரவேற்பைப் பெற்றது. ரூ. 15 கோடியில் உருவான இப்படம் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தற்போது, ஜோஜூ ஜார்ஜ் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கு, பரிபாடி எனப் பெயரிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், அன்பறிவு மாஸ்டர்கள் சண்டைக்காட்சிகளில் இப்படம் தயாராகி வருகிறது. இப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

Story image

இந்த நிலையில், பரிபாடி திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் முதல் பாடலும் நாளை (அக். 23) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

A new update has been released for the film Paribaadi, directed by actor Joju George.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.