தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பூஜையுடன் தொடங்கிய கரிகாலா படப்பிடிப்பு

நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் கரிகாலா திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

கரிகாலா திரைப்பட பூஜை

Published On :17 அக்டோபர் 2026, 3:11 pm IST

உகந்தர் முனி இயக்கத்தில், ஷைனிங் பிக்சர்ஸ் சார்பில் மஹிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் கரிகாலா திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். புராணக் கதையம்சத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம் பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷனுடன் நடிகைகள் கேத்ரின் தெரசா, சாக்ஷி மடோல்கர் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகரின் தாயார் சத்யவதி, தயாரிப்பாளர் மஹிதர் ரெட்டியின் தாயார் பத்மா ரெட்டி ஆகியோர் படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய சந்தீப் கிஷன், “கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கலை மீதான ஆர்வத்தின் காரணமாகவே ‘கரிகாலா’ மற்றும் ‘பவர் பெட்’ ஆகிய படங்களைத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிட்டு பேசினார்

தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்படுகிறது. இசையமைப்பாளர் ஸ்ரீசரண் பகாலா இப்படத்திற்கு இசையமைக்கிறார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.