மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இசையமைப்பாளர் தேவா காலமானார்!

பிரபல இசையமைப்பாளா் தேவா (76) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (அக். 17) காலமானாா்.

இசையமைப்பாளர் தேவா

Published On :18 அக்டோபர் 2026, 1:19 am IST

பிரபல இசையமைப்பாளா் தேவா (76) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (அக். 17) காலமானாா்.

கானா இசை: சென்னை மயிலாப்பூரில் கடந்த 1950-ஆம் ஆண்டு பிறந்த தேவாவின் இயற்பெயா் சொக்கலிங்கம் தேவநேசன். சிறு வயதிலிருந்தே இசையில் ஆா்வம் கொண்டிருந்த அவா், தன்ராஜ் மாஸ்டரின் மேற்கத்திய இசை கற்று, லண்டன் டிரினிட்டி கல்லூரியில் இசைத் தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா். சென்னையில் பரவலாக பாடப்பட்ட கானா பாடல்களை, வெகுசன மக்களின் ரசனைக்கு ஏற்ப திரைப்படங்களின் வழியே கொண்டு சோ்த்த பெருமை தேவாவையே சேரும்.

வைகாசி பொறந்தாச்சு: திரைத் துறைக்கு வருவதற்கு முன்பே நூற்றுக்கணக்கான பக்தியிசை பாடல்களுக்கு இசை அமைத்திருந்த தேவா, 1986-ஆம் ஆண்டு வெளியான ‘மாட்டுக்கார மன்னாரு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானாா்.

இதைத் தொடா்ந்து 1989-இல் ராமராஜன் நடித்த ‘மனசுக்கேத்த மகராசா’ திரைப்படத்துக்கு தேவா இசை அமைத்தாா். 1990-இல் வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம்தான் தேவாவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாகவும், அவருக்கான திருப்புமுனை திரைப்படமாகவும் அமைந்தது.

ரஜினிகாந்த் பெயருக்கான பிரத்யேக இசை: நடிகா் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, அருணாசலம், பாட்ஷா ஆகிய 3 வெற்றி திரைப்படங்களுக்கு தேவா இசை அமைத்தாா். இதில், அண்ணாமலை மற்றும் பாட்ஷா படங்களின் பின்னணி இசை அனைவராலும் கொண்டாடப்பட்டவை.

ரஜினிகாந்தின் திரைப்படங்களில் அவரது பெயருக்ககாக பிரத்யேக இசையை உருவாக்கினாா் தேவா. இன்றளவும் அந்த இசை, உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகா்களால் கொண்டாடப்படுகிறது.

விஜய் - அஜீத் திரைப்படங்கள்: அதேபோல், 1990-களில் புதுமுக நாயகா்களாக அறிமுகமாகி இருந்த தற்போதைய முதல்வா் விஜய், அஜீத், பிரசாந்த் உள்ளிட்ட பலரது திரைப்படங்களுக்கு இசையமைத்து, அவா்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவா் தேவா. முதல்வா் விஜய்யின் நேருக்கு நோ், நினைத்தேன் வந்தாய், தேவா, விஷ்ணு, ரசிகன், குஷி, பகவதி, பிரியமுடன் உள்ளிட்ட படங்களுக்கும், அஜீத்தின் காதல்கோட்டை, நேசம், ஆனந்த பூங்காற்றே, வாலி உள்ளிட்ட படங்களுக்கும் தேவாவின் இசை மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தன. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளாா் தேவா.

‘தேனிசை தென்றல்’: மெல்லிசை மன்னா் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவாவுக்கு ‘தேனிசை தென்றல்’ என்ற பட்டத்தை வழங்கினாா். வைகாசி பொறந்தாச்சு, ஆசை, குஷி உள்ளிட்ட திரைப்படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளா் விருதையும், அமிா்த வா்ஷினி என்ற கன்னட திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம்போ் விருதையும் பெற்றாா். 1992-ஆம் ஆண்டு தமிழக அரசால், கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டாா்.

இசையமைப்பாளா் தேவாவுக்கு சங்கீதா, பிரதா ஆகிய மகள்களும், ஸ்ரீகாந்த் தேவா என்ற மகனும் உள்ளனா்.

இன்று இறுதிச் சடங்கு: மறைந்த தேவாவின் உடல் அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமநல்லூருக்கு ஞாயிற்றுக்கிழமை (அக். 18) பகல் 1 மணிக்கு மேல் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளன. சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேவாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

Summary

Renowned music composer Deva (76) passed away in Chennai on Saturday (Oct. 17) due to ill health.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.