
சொந்த தொழிலில் ரூ. 120 கோடி வருமானம் ஈட்டிய சமந்தா!
தொழிலதிபராகவும் அசத்திய சமந்தா குறித்து...

நடிகை சமந்தா தன் நிறுவனத் தயாரிப்புடன்.
நடிகை சமந்தா தொடங்கிய தொழில் நிறுவனம் ஆச்சரியப்படும் வருமானத்தை ஈட்டியுள்ளது.
தென்னிந்த சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. பல வெற்றிப்படங்களில் நடித்தவர் பாலிவுட்டில் இணையத் தொடர்களில் நடித்து இந்தியளவில் கவனிக்கப்பட்டார்.
நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின் பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோரைத் திருமணம் செய்துகொண்டார். இறுதியாக, மா இண்டி பங்காரம் என்கிற இவர் நடித்த ஆக்ஷன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமாகியது.
தொடர்ந்து, தான் தாயாகப் போவதையும் சமந்தா அறிவித்தார். தற்போது, சோனி விழா சேனலில் சமையல் நிகழ்ச்சியின் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

சமந்தா தன் நிறுவனப் பங்குதாரர்களுடன்.
இந்த நிலையில், நடிகை சமந்தா தன் நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய வாசனை திரவிய நிறுவனமான சீக்ரெட் அல்கெமிஸ்ட் (secret alchemist) ஆரம்பித்த 8 மாதங்களிலேயே ரூ. 120 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமா நடிகர்கள் நடிப்பில் ஈட்டிய பணத்தைத் தொழிலில் முதலீடு செய்வது சாதாரணம்தான் என்றாலும் தொழிலைத் தொடங்கிய ஓராண்டிற்குள் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவது சவாலானது இல்லையா? சமந்தா அதனைச் செய்திருப்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
The business venture started by actress Samantha has generated a surprising amount of revenue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






