
பிரியங்கா வீட்டில் நடந்த நிகழ்ச்சி... குவியும் வாழ்த்து!
தொகுப்பாளர் பிரியங்கா வீட்டில் நடைபெற்ற பூ முடிப்பு விழா குறித்து...

தொகுப்பாளர் பிரியங்கா வீட்டில் நடைபெற்ற பூ முடிப்பு விழா. - படம்: இன்ஸ்டாகிராம்
தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு பூ முடிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தனது நகைச்சுவைப் பேச்சால் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர். பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார்.
இதனிடையே, தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே, வசி சாச்சி என்பவரை கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப். 16 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்
இதனைத் தொடர்ந்து, பிரியங்கா தேஷ்பாண்டே, தான் கருவுற்று இருப்பதாக கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிரியங்கா தேஷ்பாண்டே வீட்டில் எளிமையான முறையில் அவருக்கு பூ முடிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனது கணவருடன் பிரியங்கா எடுத்த புகைப்படங்களை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொகுப்பாளர் பிரியங்கா வீட்டில் நடைபெற்ற பூ முடிப்பு விழா. - படம்: இன்ஸ்டாகிராம்
விரைவில் பெற்றோர் ஆகப்போகும் பிரியங்கா - வசி ஜோடிக்கு சினிமா, சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Summary
A 'poochootu' ceremony was held at the home of presenter Priyanka Deshpande. Photographs from the event are going viral on the internet.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






