தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

ஜெயிலர் 2-ல் மோகன்லால் காட்சிகள் நீக்கப்பட்டது வருத்தமளிக்கிறது: ஆண்டனி பெரும்பாவூர்

ஜெயிலர் - 2 ஏமாற்றம் அளித்ததாக ஆண்டனி பெரும்பாவூர் கருத்து...

நடிகர் மோகன்லாலுடன் ஆண்டனி பெரும்பாவூர்.

Published On :1 நவம்பர் 2026, 2:52 pm IST

ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலின் காட்சிகளை நீக்கியது வருத்தமளிப்பதாக ஆண்டனி பெரும்பாவூர் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் உலக அளவில் ரூ. 775 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழில் மட்டும் இப்படம் ரூ. 310 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.

மேலும், தெலுங்கில் ரூ. 82 கோடி, கேரளத்தில் ரூ. 75 கோடி, ஹிந்தியில் ரூ. 47 கோடி, கன்னடத்தில் ரூ. 7 கோடி என வசூலித்துள்ளதகாவும் கூறப்படுகிறது. இதனால், இந்தியாவிலேயே இப்படம் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனையைச் செய்த முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெயரையும் ஜெயிலர் - 2 திரைப்படம் பெற்றுள்ளது.

இத்திரைப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் கொண்டாட்டமாக இருந்தாலும் நடிகர் மோகன்லாலை வைத்து நிறைய காட்சிகளை எடுத்துவிட்டு படத்தில் ஓரிரு நிமிடங்கள் வரும்படியே வைத்தது மலையாள ரசிகர்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மோகன்லாலின் நீண்ட கால உதவியாளரும் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தைக் கவனித்துவரும் ஆண்டனி பெரும்பாவூர், “ஜெயிலர் - 2 திரைப்படத்தின் டிரைலரில் மோகன்லாலுக்கான காட்சிகள் இருந்த அளவிற்கு கூட திரைப்படத்தில் காட்சிகள் இல்லாதது பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது ஏமாற்றமாகவும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், ஜெயிலர் - 2 திரைப்படத்திலிருந்து மோகன்லாலுக்கான காட்சிகளை நீக்கியது குறித்து அவருக்கே சொல்லப்படவில்லை என்றே தெரிகிறது.

Producer Antony Perumbavoor has stated that the removal of actor Mohanlal's scenes is regrettable.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.