பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சநாதன தர்மம் மதம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை... அர்ஜுனின் வைரல் பேச்சு!

நடிகர் அர்ஜுன் சநாதன தர்மம் குறித்து பேசியிருப்பதாவது...

News image

நடிகர் அர்ஜுன் புகைப்படங்கள். - படங்கள்: இன்ஸ்டா / அர்ஜுன்.

Updated On :29 மே 2026, 4:03 pm IST

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள பிளாஸ்ட் திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் சநாதன தர்மம் குறித்து அர்ஜுன் பேசியிருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிளாஸ்ட் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அர்ஜுன், “சநாதன தர்மம் மதம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை” எனக் கூறியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக இருந்த சுபாஷ் கே ராஜ் அறிமுக இயக்குநராக ’பிளாஸ்ட்’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன், நடிகைகள் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர்.

பிளாஸ்ட் திரைப்படம் நேற்று (மே.29) திரையரங்குகளில் வெளியாகியது. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது அர்ஜுன் கூறியிருப்பதாவது:

சநாதன தர்மம் என்பது வாழ்க்கை முறை. நாம் வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்லுவது. தப்பு செய்யக்கூடாது, திருடக்கூடாது, இன்னொருவர் பொருள்கள் மீது ஆசைப்படாதே என்பதும் சநாதன தர்மம் கூறுகிறது.

நாம் குழந்தைகளாக இருக்கும்போது தாய் தந்தையர் எவ்வளவு அழகாக பார்த்துக்கொண்டார்கள். அதேபோல் நாமும் வயதான காலங்களில் அவர்களை கடவுள்போல பார்த்துக்கொள்ள வேண்டுமென சனாதன தர்மம் கூறுகிறது.

சநாதன தர்மம் இருக்கக்கூடாதென்றால் அவர்களது அம்மா அப்பாவை வீட்டைவிட்டு வெளியே துரத்திவிட வேண்டும். முடியுமா? சனாதன தர்மம் என்பது மதம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை. எனக்குத் தெரிந்த அளவுக்குச் சொல்கிறேன். அனைவரும் இதனைப் புரிந்துகொண்டால் நல்லது என்றார்.

Summary

Sanatana Dharma is not a religion; it is a way of life... Blast actor Arjun's viral speech!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.