இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

வரவேற்பைப் பெறும் அர்ஜுனின் பிளாஸ்ட்..! முதல் நாள் வசூல் எவ்வளவு?

நடிகர் அர்ஜுன் நடித்துள்ள பிளாஸ்ட் படத்தின் வசூல் குறித்து...

News image

பிளாஸ்ட் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / ஏஜிஎஸ்

Updated On :29 மே 2026, 2:04 pm IST

நடிகர் அர்ஜுன் நடித்துள்ள பிளாஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.1.15 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த சில நாள்களில் கூடுதல் வசூலைப் பெறுமென கணிக்கப்படுகிறது.

நடிகர் அர்ஜுன், நடிகைகள் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான பிளாஸ்ட் திரைப்படம் நேற்று (மே.29) திரையரங்குகளில் வெளியாகியது.

பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக இருந்த சுபாஷ் கே ராஜ் அறிமுக இயக்குநராக இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கராத்தே கற்றுத்தேந்த குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகுந்த சுவாரசியமாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் விவேக் பிரசன்னா, ஜான் கோக்கென், அர்ஜுன் சிதம்பரம், பவன், திலீபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

கேஜிஎஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையில் படத்தின் பின்னணி இசை பாராட்டப்பட்டு வருகிறது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Blast box office day 1: Arjun's 'Blast' Receives a Warm Reception! What Are the Day 1 Box Office Collections?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.