பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆனந்த ராகம் சீரியல் நாயகியின் புதிய தொடர்! சொக்கத் தங்கம்!

ஆனந்தராகம் நாயகி அனுஷா ஹெக்டே புதிய தொடரில் நடிக்கவுள்ளது குறித்து...

News image

அனுஷா ஹெக்டே / விஜய் விஷ்வா - இன்ஸ்டாகிராம்

Updated On :19 மே 2026, 6:07 pm IST

ஆனந்தராகம் தொடரில் நாயகியாக நடித்த நடிகை அனுஷா ஹெக்டே புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இத்தொடருக்கு சொக்கத் தங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அனுஷாவுக்கு ஜோடியாக நடிகர் விஜய் விஷ்வா நடிக்கவுள்ளார். இத்தொடரில் நடிக்கவுள்ள பிற நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஆனந்த ராகம் தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் நடிகை அனுஷா ஹெக்டே நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நடிகர் அழகப்பனும் நடிக்கின்றனர்.

பிரீத்தி சஞ்சீவ், ஸ்வேதா செந்தில்குமார், இந்து செளத்ரி, ரஞ்சன் குமார், வைஷாலி தணிகா, அஞ்சலி, வரதராஜன், ஜெயக்குமார், சிவரஞ்சினி விஜய் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இத்தொடரில் அதிரடிக் காட்சிகள் இடம்பெற்றது. அதுவும் நடிகை அனுஷா அதில் பல்வேறு சூழல்களில் சண்டையிடும் காட்சிகளும் இடம் பெற்றன. இதனால், இத்தொடரின் மூலம் அதிரடி நாயகி என்ற பெயரை ரசிகர்கள் இவருக்கு வைத்தனர்.

இதுமட்டுமின்றி ஆனந்த ராகம் தொடரில் ஒருகட்டத்திற்கு மேல் இரட்டை வேடமும் அனுஷாவுக்கு கொடுக்கப்பட்டது. தைரியம் நிறைந்த அதிரடிப் பெண்ணாக ஒரு பாத்திரத்திலும், எதற்கெடுத்தாலும் அச்சம் கொள்ளும் வெள்ளந்தி பெண்ணாக மற்றொரு பாத்திரத்திலும் அனுஷா நடித்து புகழ் பெற்றார்.

ஆனந்த ராகம் தொடர் முடிந்த பிறகு, எந்தவொரு தொடரிலும் இடம்பெறாத நிலையில், தற்போது சொக்கத்தங்கம் தொடரில் நடிகை அனுஷா நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகர் விஜய் விஷ்வா நடிக்கவுள்ளார். இவர் கயல், மகாநதி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி கேரள நாட்டிளம் பெண்களுடனே, டூரிங் டாக்கிஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

Summary

serial actress anusha hegde vijay vishwa Pairing Up new serial chokka thangam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.