நடிகை ப்ரீத்தி ஷர்மா பிரதான பாத்திரத்தில் நடிக்கும் புதிய தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.
சித்தி - 2 தொடரில் வெண்பா பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இவர் தமிழ், தெலுங்கு மொழி தொடர்களில் நடித்து வருகிறார்.
இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலர் தொடரில் நடித்திருந்தார். பின்னர், தனிப்பட்ட காரணங்களால் இந்தத் தொடரிலிருந்து விலகினார்.
ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இவர் நடித்திருந்த பத்மதி சந்தியாராகம் தொடர், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ப்ரீத்தி ஷர்மா நடிக்கிறார். இந்தத் தொடருக்கு சாமந்தி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தொடரில், விஷ்வா, ஷமிதா, சுர்ஜித் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். சரிகம நிறுவனம் இந்தத் தொடரை தயாரிக்கிறது.
சாமந்தி தொடரின் ஒளிபரப்பு தேதி, நேரம் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறுகிய காலத்தில் முடிவடையும் புதிய தொடர்!

ஆக்ஷன் அழகே... ப்ரீத்தி முகுந்தன்!

அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடிக்கும் சிறகடிக்க ஆசை நடிகர்!

கவனம் ஈர்க்கும் ப்ரீத்தி அஸ்ரானியின் புதிய பட டீசர்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


