சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

குறுகிய காலத்தில் முடிவடையும் புதிய தொடர்!

கனா கண்டேனடி தொடர் முடிவடையவுள்ளது தொடர்பாக...

News image

கனா கண்டேனடி தொடர் - படம்: விடியோ கிளிப்

Updated On :8 ஜூன் 2026, 1:29 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கனா கண்டேனடி தொடர் விரைவில் முடிவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

மூன்று தோழிகள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு, எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் பாணியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. தென்றல் தொடரை தயாரித்த விகடன் நிறுவனமே, இந்தப் புதிய தொடரையும் தயாரித்து வருகிறது.

கனா கண்டேனடி தொடரில் பிரதான வேடங்களில் சைத்ரா, கவிதா சம்பத், சஞ்சனா ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனாக ஜாய்சன் நடிக்கிறார்.

கனா கண்டேனடி தொடர் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இந்தத் தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

தொடர் ஆரம்பிக்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில், தொடர் நிறைவடையவுள்ளதாக வெளியாகும் தகவல், கனா கண்டேனடி தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Reports indicate that the serial Kana Kandenadi, currently airing on Vijay TV, is set to conclude soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.