சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் இன்று (மே 15) வெளியாகவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வடமாநிலங்களின் ஒருசில இடங்களில் திட்டமிட்டபடி கருப்பு படம் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில், நடிகை த்ரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, ஜார்ஜ் மரியான், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படம் மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.
தயாரிப்பு நிறுவனம், ஜஸ்வந்த் பண்டாரி என்பவருக்கு பணம் கொடுக்க வேண்டிய பிரச்னையால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று பிரச்னைகள் சரி செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இதனிடையே படம் வெளியாகாதது குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி உருக்கமாக விடியோ வெளியிட்டிருந்தார். அதில், ''ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படம் பார்ப்பதே வாழ்க்கையில் இருக்கும் பிரச்னைகளில் இருந்து வெளிவருவதற்குத்தான். நான் இதை எதிர்பார்க்கவில்லை. பிரச்னைகள் எல்லாம் சரியாகி படம் ரிலீஸாகும் என நம்புகிறேன்'' எனக் கண்ணீருடன் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு இன்று (மே 15) படம் வெளியாகவுள்ளதாக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் மே 15 அதிகாலையில் அறிவித்துள்ளது.
Summary
Suriya's Karuppu releases today Production company announces.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருப்பு இன்றைய காட்சிகள் ரத்து?
மும்பை, புணேவில் வெளியான கருப்பு!
கருப்பு வெளியாகுமா? ஆகாதா? தயாரிப்பாளரைத் தாக்கும் ரசிகர்கள்!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா
விடியோக்கள்

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


