நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் மும்பை, புணேவில் வெளியாகியுள்ளது.
இன்று வெளியாக இருந்த நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் காலை காட்சிகள் தமிழகம் உள்பட பல பகுதிகளிலும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபுவுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் இடையேயான கடந்த கால நிதிப்பிரச்னையே இதற்கு காரணம் எனச் கூறப்படுகிறது. இதனை முதலிலேயே தயாரிப்பாளர் சரி செய்யாததால், வெளியீட்டன்று ரத்து செய்யும் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
பிரச்னையைச் சரி செய்ய நடிகர் சூர்யா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் என்றும் இன்று கருப்பு வெளியாகிவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மும்பை மற்றும் புணேவில் கருப்பு திரைப்படம் தவறுதலாக வெளியாகியுள்ளதாம். அங்கு படம் பார்த்துக்கொண்டிருந்த சிலர், திரையில் சூர்யாவின் பெயர் வரும் காட்சியை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
ஆனால், இப்படத்தை பாதியில் நிறுத்திவிட்டதாகவும் சிலர் கூறி வருகின்றனர். அதேநேரம், தமிழகத்தில் மதிய காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கருப்பு மாலைக் காட்சியாக வெளியாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Actor Suriya's film Karuppu has been released in Mumbai and Pune.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சும்மா தெறிக்குது... கருப்பைப் பாராட்டிய கார்த்தி!

சூர்யாவின் கருப்பு இன்று வெளியாகிறது!

கருப்பு இன்றைய காட்சிகள் ரத்து?
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை
