தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கில் நடிகை த்ரிஷா போட்டியிடலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 1.20 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளிலும், அதிமுக 57 தொகுதிகளிலும், திமுக 49 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இதில், தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் 1.30 மணி நிலவரப்படி (6வது சுற்று) 40,339 வாக்குகள் பெற்று 16,574 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சேகர் 20,908 வாக்குகள் பெற்றுள்ளார்.
மேலும், திருச்சி கிழக்கில் 29884 வாக்குகள் பெற்று, 12173 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இதனால், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு தொகுதியில் வென்றால் ஏதாவது ஒரு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
இந்த நிலையில், விஜய் திருச்சி கிழக்கில் ராஜிநாமா செய்வார் என்றும் அத்தொகுதியில் மீண்டும் நடைபெறும் இடைத் தேர்தலில் தவெக சார்பாக நடிகை த்ரிஷா போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reports suggest that actress Trisha may contest in Trichy East, where Tvk leader Vijay contested.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் பிறந்த நாள்... த்ரிஷா ஏன் வாழ்த்தவில்லை?

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இந்த முறை என்னவென்று வாழ்த்துவார் த்ரிஷா?

விஜய் பதவியேற்பு விழா: த்ரிஷா உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்பு!
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


