மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

எதிர்நீச்சல் - 2 தொடரில் கனிகாவுக்கு பதிலாக ஸ்ரீஜா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எதிர்நீச்சல் -2 தொடரில் கனிகாவுக்கு பதிலாக நடிகை ஸ்ரீஜா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

ஸ்ரீஜா - இன்ஸ்டாகிராம்

Updated On :26 மார்ச் 2026, 3:45 pm IST

எதிர்நீச்சல் -2 தொடரில் கனிகாவுக்கு பதிலாக நடிகை ஸ்ரீஜா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரி பாத்திரத்தில் கனிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகினார். இதனை அடுத்து ஈஸ்வரி பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சில நடிகைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன.

இந்நிலையில், ஈஸ்வரி பாத்திரத்தில் நடிகை கனிகாவுக்கு பதிலாக ஸ்ரீஜா நடிக்கவுள்ளதை சன் தொலைக்காட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்நீச்சல் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகளே நடித்து வருகின்றனர். ஆணாதிக்கம் நிறைந்த வீட்டிற்குத் திருமணம் முடிந்து வந்த மருமகள்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பிரச்னைகளையுமே மையப்படுத்தி எதிர்நீச்சல் -2 எடுக்கப்பட்டு வருகிறது.

இத்தொடரில் நடிகை பார்வதி, ஹரிபிரியா இசை, தேவதர்ஷினி, கனிகா ஆகிய 4 பேர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வந்தனர். இதில், தனிப்பட்ட காரணங்களுக்காக நடிகை கனிகா (ஈஸ்வரி) எதிர்நீச்சல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், கடந்த சில நாள்களாக கனிகாவின் பாத்திரம், கதையில் இடம்பெறாமல் இருந்தது.

எதிர்நீச்சல் -2 தொடரில் கனிகா / ஸ்ரீஜா

எதிர்நீச்சல் -2 தொடரில் கனிகா / ஸ்ரீஜா - இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் தற்போது ஈஸ்வரி பாத்திரத்தில் நடிகை கனிகாவுக்கு பதிலாக நடிகை ஸ்ரீஜா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது இதனை சன் தொலைக்காட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்ரீஜாவின் வருகையால் கதையில் பல புதிய திருப்பங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக அறிமுகமாவதால், இவரின் நடிப்புத் திறனுக்கு இடமளிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொம்மலாட்டம், கல்யாணப் பரிசு, விதி உள்ளிட்டத் தொடர்களில் நடிகை ஸ்ரீஜா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Serial actress Sreeja to replace Kanika in Ethirneecchal 2 Serial Official announcement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.