மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரூ. 100 கோடி வசூலித்த ஆடு - 3!

ஆடு - 3 திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது...

News image

ஆடு - 3

Updated On :26 மார்ச் 2026, 11:23 am IST

ஆடு - 3 திரைப்படம் சில நாள்களிலேயே ரூ. 100 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் பிரபலமான திரைப்படம் ஆடு. இயக்குநர் மிது மானுவல் தாமஸ் இயக்கத்தில் நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் கடந்த 2015 வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற சாஜி பப்பன் (ஜெயசூர்யா) அணிக்கு ஆடு ஒன்று வழங்கப்படுகிறது. இந்த ஆட்டை கொல்ல முடிவு செய்யும்போது நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை. சுவாரஸ்யமான நகைச்சுவை படமாக உருவான இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், ஆடு - 3 திரைப்படம் கடந்த மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

டிரைலர் கவனம் ஈர்த்திருந்தாலும் யாரும் எதிர்பாராத அளவிற்கு முதல் நாளிலிருந்தே மிகப்பெரிய அளவில் டிக்கெட் விற்பனை நடைபெற்றது. இதனால், முதல் 4 நாள்களில் இப்படம் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

தற்போது, உலகளவில் இப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோகன்லால், மம்மூட்டி திரைப்படங்கள் மட்டுமே செய்து வந்த விரைவான அதிக வசூலை ஜெயசூர்யா முதல்முறையாக செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.