அன்பே டயானா திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.
ஜமா திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்றவர் பாரி இளவழகன். அந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து அவர் இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படம் ’அன்பே டயானா’.
லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
நாயகியாக ரம்யா ரங்கநாதன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் நடக்கும் காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது, இப்படத்தின் முதல் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகியுள்ளது. ஜாஸ்ஸி கிஃப்ட் பாடிய இப்பாடலை மோகன் ராஜன், பாக்கியம் சங்கர், முத்தமிழ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
இப்படம் கோடை வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகின்றது.
Summary
Anbe diana first single released
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?

தஸ்ஸாடியா பாடல்!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் முதல் பாடல்!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

