மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

துரந்தர் - 2 தமிழில் நாளை வெளியாகிறது!

துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படம் தமிழில் நாளை வெளியாகவுள்ளது.

News image

துரந்தர்

Updated On :20 மார்ச் 2026, 6:55 pm IST

ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படம் தமிழில் நாளை (மார்ச் 21) வெளியாகவுள்ளது.

முதல் பாகத்தில் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செல்லும் ரன்வீர் சிங், அங்கிருந்து இந்தியாவுக்கு பயங்கரவாதிகள் ஊடுருவுவது, ஆயுதங்கள் கடத்துவது, கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது போன்ற தகவல்களை சேகரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர்: தி ரிவென்ஞ்ச் நேற்று (மார்ச் 19) வெளியானது.

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், அக்‌ஷய் கன்னா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

முதல் பாகம் ஹிந்தியில் மட்டும் வெளியாகி ரூ. 1,000 கோடிக்கும் மேல் வசூலித்த நிலையில், இரண்டாம் பாகம் நேரடியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகள் நேற்றுமுன் தினம் (மார்ச் 18) அன்று வெளியிடப்பட்டன. அதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹிந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட வேற்று மொழிக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், நேற்று உலகம் முழுவதும் துரந்தர் படம் வெளியானது. முதல் நாளில் மட்டுமே ரூ. 240 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்தப் படம், தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஹிந்தி மொழியில் மட்டுமே வெளியாகி ரூ. 3 - 4 கோடி வரை வசூலித்துள்ளது

இதனைத் தொடர்ந்து, தமிழ் மொழியில் காட்சிகள் ரத்தான நிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பு சென்சார் செய்யப்பட்டு நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நாளை முதல் தமிழிலும் இந்தத் திரைப்படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Dhurandhar 2 tamil version releasing tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.