நடிகை ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக தகவல் தெரியவந்துள்ளது.
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பைக் கொடுத்ததுடன் கதை ரீதியாகவும் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது தாய் கிழவி திரைப்படம்.
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படம், கிராமத்து பின்னணியை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படத்தில் சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன் மற்றும் இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
பல திரையரங்கங்களில் கூடுதல் காட்சிகளைத் தாய் கிழவி படத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், உலகளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தாய் கிழவி திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Summary
Information has been revealed regarding the OTT release of the film Thai Kishavi starring actress Radhika Sarathkumar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்னவொரு பிறந்த நாள் பரிசு! த்ரிஷாவை வாழ்த்திய ராதிகா!
தேசிய விருது தர வேண்டும்... ராதிகாவைப் பாராட்டிய பாரதிராஜா!

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!

தாய் கிழவி ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

