மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தேசிய விருது தர வேண்டும்... ராதிகாவைப் பாராட்டிய பாரதிராஜா!

இயக்குநர் பாரதிராஜா நடிகை ராதிகாவைப் பாராட்டியுள்ளார்...

News image

ராதிகா, பாரதிராஜா

Updated On :19 ஏப்ரல் 2026, 3:30 pm IST

இயக்குநர் பாரதிராஜா நடிகை ராதிகா சரத்குமாரைப் பாராட்டியுள்ளார்.

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அசத்தலான வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்க வெளியீட்டிலேயே ரூ. 80 கோடி வரை வசூலித்து இந்தாண்டின் பெரிய வெற்றிப்படமானது. இந்த வெற்றியால் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் நல்ல லாபகரமான படமாகவே தாய் கிழவி அமைந்துள்ளது.

மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி தென்னிந்தியளவில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் பாரதிராஜா தாய் கிழவி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகை ராதிகாவிடம், ‘உனக்கு தேசிய விருது தர வேண்டும்’ எனப் பாராட்டியுள்ளார். இருவரும் பேசிக்கொள்ளும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ராதிகா. தாய் கிழவி படம் வெளியான போதே இப்படத்தை இயக்குநர் பாரதிராஜா காண வேண்டுமென ராதிகா ஆசைப்பட்டார். தற்போது, அது நிகழ்ந்ததுடன் அவரிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்தது ராதிகாவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

director bharathiraja appreciates radhika for thaai kizhavi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.