அரசன் படத்தில் ஹார்ட் பீட் இணையத் தொடர் நடிகை யோகலட்சுமி இணைந்துள்ளார்.
கேங்ஸ்டர் கதையாக உருவாகிவரும் அரசன் திரைப்படத்தில், நடிகர் சிலம்பரசன் மூன்று தோற்றங்களில் நடிக்கவுள்ளார். சிலம்பரசன் பாத்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை மதுரையில் நிறைவு செய்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆண்ட்ரியா, கிஷோர், விக்ராந்த், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக அரசன் உருவாகிறது. கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இந்தாண்டு இறுதிக்குள் அரசன் திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், அரசன் திரைப்படத்தில் ஹார்ட் பீட் இணையத் தொடர் பிரபலம் யோகலட்சுமி முக்கிய பாத்திரத்தில் இணைந்துள்ளார்.
யார் இந்த யோகலட்சுமி?
ஹார்ட் பீட் இணையத் தொடரில் தேஜு பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை யோகலட்சுமி. அவரின் தனித்துவமான நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டட நிலையில், தற்போது தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

யோக லட்சுமி - படம்: Instagram
சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிகை யோகலட்சுமி நடித்திருந்த நிலையில், தற்போது அரசன் படத்தில், முக்கிய பாத்திரத்தில் இணைந்துள்ளார்.
அரசன் படத்தில் யோகலட்சுமி இணைந்துள்ளது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Heartbeat web series actress Yogalakshmi has joined the cast of the film Arasan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேயோனில் பாக்யஸ்ரீ போர்ஸ்... போஸ்டர் வெளியீடு!

சின்ன மருமகள் தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

சின்ன மருமகள் தொடரில் இணைந்த சுஜிதா!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


