/

பவன் கல்யாணுக்கு வாழ்த்து கூறிய சிரஞ்சீவி..! டிரெண்டிங்கில் உஸ்தாத் பகத்சிங் டிரைலர்!

பவன் கல்யாணுக்கு வாழ்த்து கூறிய நடிகர் சிரஞ்சீவியின் பதிவு குறித்து...

News image

பவன் கல்யாண், சிரஞ்சீவி. - படங்கள்: எக்ஸ் / பவன் கல்யாண், சிரஞ்சீவி.

Updated On :15 மார்ச் 2026, 12:32 pm IST

நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான உஸ்தாத் பகத்சிங் டிரைலர் யூடியூப்பில் டிரெண்டிங்கில் இருக்கிறது.

பவன் கல்யாண் நடிப்பில் வெளியான இந்தப் பட டிரைலருக்கு நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர துணை முதல்வராக தேர்வாகியும் தனது நடிப்பைக் கைவிடாமல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் பவன் கல்யாண் இறுதியாக நடித்த ஓஜி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

உஸ்தாத் பகத்சிங் படத்தை இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 19 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஸ்ரீலீலா, பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் டிரைலர் குறித்து நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அற்புதம் நடந்திருக்கிறது... முகூர்த்தம் சரியான இடத்தில் விழுந்துள்ளது... டிரைலர் மிகவும் நன்றாக இருக்கிறது. உகாதியில் வெளியாகும் உஸ்தாத் பகத்சிங், எல்லாமே நல்லவையாக நடக்க எனது வாழ்த்துகள்.

படக்குழுவுக்குவும் கல்யாண் அவர்களுக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார். அரசியல் ரீதியாக இருவரும் மாற்றுக் கருத்துடைய கட்சியில் இருந்ததும் பின்னர் ஒன்றிணைந்ததும் குறிப்பிடத்தக்கது.

Summary

The trailer of Ustad Bhagat Singh, starring actor Pawan Kalyan, is trending on YouTube.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.