தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

உறியடி விஜய்குமாரின் புதிய படத்தில் பிக் பாஸ் சுபிக்‌ஷா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற மீனவப் பெண் சுபிக்‌ஷா, புதிய படத்தில் நடிக்கவுள்ளது குறித்து...

News image

சுபிக்‌ஷா , விஜய் குமார் - படங்கள் - இன்ஸ்டாகிராம்

Updated On :9 மார்ச் 2026, 4:09 pm IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற மீனவப் பெண் சுபிக்‌ஷா, நடிகர் விஜய் குமாரின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

உறியடி, உறியடி -2 திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த விஜய் குமார், ஃபைட் கிளப், எலக்சன் போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சத்ய சிவா இயக்கும் அறிவு திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். டி. இமான் இசையமைக்கும் இப்படத்தை மூவிட்ரோன் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

மகளிர் நாளையொட்டி இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் சூர்யா - ஜோதிகா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் போஸ்டரில், பிக் பாஸ் புகழ் சுபிக்‌ஷா இடம்பெற்றுள்ளார். இதன்மூலம் இப்படத்தில் சுபிக்‌ஷாவும் முக்கிய பாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

சுபிக்‌ஷா

சுபிக்‌ஷா - இன்ஸ்டாகிராம்

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை சுபிக்‌ஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இயக்குநர் சத்ய சிவாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அறிவு பட போஸ்டர்

அறிவு பட போஸ்டர் - படம் - இன்ஸ்டாகிராம்

தனது நீண்டநாள் கனவான நடிப்புப் பயணம் அறிவு திரைப்படத்தின் மூலம் சுபிக்‌ஷாவுக்குத் தொடங்கியுள்ளது. இதற்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருப்பேன் என சுபிக்‌ஷா குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள், பிக் பாஸ் பிரபலங்கள் பலர் சுபிக்‌ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Bigg Boss tamil 9 Subiksha to star in Uriyadi Vijaykumar's new film Arivu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.