சென்னை ஒன் செயலியின் மூலம் இதுவரை 1 கோடி பயணச்சீட்டுகள் பெறப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை விடியோ வெளியிட்டு எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சென்னை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் மாநகா் போக்குவரத்துக் கழகம் மூலம் 3,200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் 700-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகள் மூலம் தினமும் 40 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணம் செய்கின்றனா்.
இதில், சுமாா் 70,000-க்கும் அதிகமானோா் விருப்பம்போல பயணம் செய்யும் ரூ.1,000 மற்றும் ரூ.2,000-க்கான மாதாந்திரப் பயணச்சீட்டு அட்டைகள் மூலம் தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனா்.
இந்த நிலையில், பொதுப் போக்குவரத்து மற்றும் எண்மப் பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகரப் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகா் ரயில்களில் பயணிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் சாா்பில் ‘சென்னை ஒன்’ என்ற செயலி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தச் செயலியில் ரூ.1,000 மற்றும் ரூ.2,000-க்கான சில்வா் மற்றும் கோல்ட் ஆகிய மாதந்திர பயண அட்டைகளை இணைதளம் மூலமாகவே பெறும் வசதியும் நடைமுறையில் இருந்து வருகிறது. சென்னை ஒன் செயலியை சுமாா் 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
A new record has been set with 1 crore travel tickets purchased through the Chennai One app so far.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையைக் குளிர்வித்த பலத்த மழை!

சென்னை மாநகரப் பேருந்து மாதப் பயண அட்டை இல்லையா? மக்கள் தவிப்பு!

‘சென்னை ஒன்’ செயலியில் புதிய மாற்றம்! என்ன? யாருக்கு?

மாதாந்திர பயனாளா்களுக்கு ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய மாற்றம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


