சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பிரியங்கா தேஷ்பாண்டே, தான் கருவுற்று இருப்பதாக அறிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை எனலாம்.
தனது நகைச்சுவைப் பேச்சால் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடையே பிரபலமானார்.
இதனிடையே, தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே, வசி சாச்சி என்பவரை கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப். 16 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்
இந்த நிலையில், பிரியங்கா தேஷ்பாண்டே தான் கருவுற்று இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், பிரியங்காவும் அவரது கணவர் வசியும் 'மாம் மற்றும் டேட்’ என்று எழுதப்பட்ட தொப்பிகளை அணிந்து கொண்டு நடனம் ஆடியுள்ளனர். பின்புறத்தில் ’நிறைமாத நிலவே வா’ பாடல் ஒலிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பிரியங்கா - வசி ஜோடிக்கு சினிமா, சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Summary
Priyanka Deshpande, who hosts shows such as Super Singer on Vijay TV, has announced that she is pregnant.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயலி தொடர் நாயகனை கரம் பிடித்த சியாமந்தா!

என் சிரிப்புக்குக் காரணம் கணவர்தான்! ஆஹா கல்யாணம் நடிகை அக்ஷயா உருக்கம்!

சின்ன திரையின் டாப் 5 சீரியல்கள்! முதலிடத்தில் மூன்று முடிச்சு!

ஆன்மிக பயணத்தில் நடிகை சைத்ரா ரெட்டி!
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு


