நடிகர் மகேந்திரன் மின்சாரத் தடை குறித்து பேசியதற்கு விளக்கமளித்து விடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகர் மகேந்திரன் சில நாள்களுக்கு முன் அளித்த நேர்காணலில் மின்சாரத் தடை குறித்த கேள்விக்கு, “இவ்வளவு நாள் மின்சாரத்துடன் ஜாலியாக இருந்தவர்கள், ஒரு ஆறு மாதம் இல்லாமல் இருக்க முடியாதா? மின்சாரம் இல்லையென்றால் என் வீட்டிலிருந்துகூட மின்சாரம் எடுத்துக்கொள்ளுங்கள். அனைவரும் சோலார் சிஸ்டம் வழியாக மின்சாரத்தைப் பயன்படுத்தலாமே? அரசை ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமென கேட்டுக்கொண்டே இருப்பதா? அவரைக் (முதல்வர் விஜய்) கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா? கேள்வி கேட்டே ஆக வேண்டும் என இருக்கிறார்கள்.” என்றார்.
மகேந்திரனின் இப்பேச்சு பலரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், மகேந்திரன் மீது பலரும் இணையத் தாக்குதல்களைச் செய்தனர். 6 மாதம் நீங்கள் மின்சாரம் இல்லாமல் வாழ்வீர்களா? என மகேந்திரனைக் கடுமையாகத் தாக்கியும் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், மகேந்திரன் விளக்க விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அண்மையில் நான் அளித்த நேர்காணல் பேசப்பட்டு வருகிறது. நான் யாரெல்லாம் சரியானவர்கள் என நம்புகிறேனோ அவர்களும் என்னைப் பற்றி பேசியிருந்தார்கள். கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா? எனக் கேட்டேன். மின்சாரத் தடையை வைத்து அரசியல் செய்யும் சிலரைப் பார்த்துதான் அந்தக் கேள்வியைக் கேட்டேன். பொதுமக்களைக் கேக்கவில்லை. முதல்வர் விஜய் அண்ணா ஆறு மாத காலம் அவகாசம் கேட்டிருந்தார். அவர் மீதான அன்பின் வெளிப்பாட்டிலே அப்படி சொன்னேன். இன்னொன்று, சோலார் சிஸ்டம் குறித்து பேசியிருந்தேன். சோலார் பவர் எனச் சொல்லிருக்க வேண்டும் எனக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை என்பதால் பிழையாகிவிட்டது. கொச்சி விமான நிலையம் முழுக்க சோலார் பவர் மூலமே இயங்குகிறது. அதைப் பார்த்தபோது நம்மூரிலும் இதனைச் செய்யலாமே, இங்கும் எத்தனை கிராமங்கள் மின்சார வசதி இல்லாமல் இருக்கின்றன? எனக் கேள்விகள் இருந்தது. அதனாலேயே அப்படிச் சொன்னேன்.
மேலும், என் வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றேன். உண்மையில், நானும் உங்களைப் போல்தான் சிரமப்படுகிறேன். வேண்டுமென்றால், என் வீட்டிலிருந்தாவது எடுத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொன்னேன். மகேந்திரனுக்குத் திமிர் அதிகம் என்றும் மக்களின் வலியை ஏளனம் செய்கிறான் என்றும் கூறுகிறார்கள். தயவுசெய்து அந்தப் படத்தை எனக்குக் கொடுக்காதீர்கள். இன்று, ஒருவேளை உணவு உண்கிறேன் என்றால் அது இந்த மக்கள் கொடுத்ததுதான் அவர்களை எப்படி அவமதிப்பேன்? நான் பேசியது மக்களிடம் காயத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
Actor Mahendran has released a video clarifying his remarks regarding the power outage.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இயக்குநர் விக்ரமன் என்னை விரட்டினாரா? மகேந்திரன் விளக்கம்!

மின்சாரம் இல்லையென்றால்... சர்ச்சையில் மாஸ்டர் மகேந்திரன்!

தீப்பற்றிய லாரியை விடியோ எடுத்த இளைஞருக்கு கன்னத்தில் அறை: காவலா் மீது குற்றச்சாட்டு

கருப்பன் வருவான்... கண்ணீருடன் விடியோ வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி!
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் பதில் இருக்கிறதா ? | CM Vijay | TVK | Raghava Lawrence
இணையதளச் செய்திப் பிரிவு

"ஆளுநருடன் இனி மோதல் கிடையாது": அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
தினமணி செய்திச் சேவை

லவ் ஓ லவ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது வாம்மா... வாம்மா... பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


