‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

கருப்பன் வருவான்... கண்ணீருடன் விடியோ வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி!

கருப்பு வெளியீடு ரத்தானது குறித்து ஆர்ஜே பாலாஜி...

News image

ஆர்ஜே பாலாஜி

Updated On :14 மே 2026, 1:31 pm IST

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி கருப்பு திரைப்படத்தின் வெளியீடு ரத்தானது குறித்து கண்ணீருடன் விடியோ வெளியிட்டுள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையேயான நிதிப் பிரச்னையால் இன்று வெளியீட்டைச் சந்திக்காமல் இருக்கிறது. நடிகர் சூர்யாவும் இப்பிரச்னையைத் தீர்க்க பெரிய தொகையைச் செலுத்த முன் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இது நடந்திருக்கக் கூடாது. திரைப்படம் பார்ப்பதே நம் துன்பங்களை மறக்கத்தான். ஆனால், படம் பார்க்க வருவதே துன்பமாக அமைந்துவிடக்கூடாது. நானும் இதை எதிர்பார்க்கவில்லை. கருப்பன் வரான் வழி மறிக்காதே என்றால் நிறைய பேர் மறித்துக்கொண்டிருக்கிறார்கள். கடவுள் நம்முடன் இருக்கிறார். படம் இன்று மாலை வெளியாகும் என நம்புகிறேன். உங்களுக்கெல்லாம் கண்டிப்பாக பிடிக்கும்.” எனக் கண்ணீருடன் கூறியது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Director RJ Balaji has released a tearful video regarding the cancellation of the release of the film Karuppu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.