புதிய உச்சத்தில் முட்டை விலை!விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மின்சாரம் இல்லையென்றால்... சர்ச்சையில் மாஸ்டர் மகேந்திரன்!

நடிகர் மகேந்திரன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

News image

மாஸ்டர் மகேந்திரன்

Updated On :14 ஜூன் 2026, 12:33 pm IST

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் நடிகர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகராகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இளவயது விஜய் சேதுபதியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். ஆனால், மகேந்திரனுக்கு சரியான வெற்றி அமையவில்லை என்பதால் அதிக வாய்ப்புகளும் செல்வதில்லை.

அண்மையில், இவர் நடிப்பில் வெளியான 29 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், நேர்காணலில் பேசிய மகேந்திரனிடம் சென்னையில் அடிக்கடி மின்சாரத் தடையாவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு மகேந்திரன், “இவ்வளவு நாள் மின்சாரத்துடன் ஜாலியாக இருந்தவர்கள், ஒரு ஆறு மாதம் இல்லாமல் இருக்க முடியாதா? மின்சாரம் இல்லையென்றால் என் வீட்டிலிருந்துகூட மின்சாரம் எடுத்துக்கொள்ளுங்கள். அனைவரும் சோலார் வழியாக மின்சாரத்தைப் பயன்படுத்தலாமே? அரசை ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமென கேட்டுக்கொண்டே இருப்பதா? அவரைக் (முதல்வர் விஜய்) கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா? கேள்வி கேட்டே ஆக வேண்டும் என இருக்கிறார்கள்.” என்றார்.

மகேந்திரனின் இப்பேச்சு பலரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 மாதம் நீங்கள் மின்சாரம் இல்லாமல் வாழ்வீர்களா? என மகேந்திரனைக் கடுமையாகத் தாக்கியும் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.

Actor Master Mahendran has landed in a new controversy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.