நடிகர் ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் புதிய அப்டேட் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜீவாவுக்கு இறுதியாக தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றதுடன் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தற்போது, பிளாக் பட இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ஜீவா தன் 47-வது படத்தில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி திரைப்படம் ஜீவாவுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின், பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா - ராஜேஷ் கூட்டணி இணைந்துள்ள இப்படத்திற்கு ’ஜாலியா இருந்த ஒருத்தன்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பும் முடிந்தது. தற்போது, இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் நாளை (ஜூன் 18) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
An update has been announced regarding actor Jiiva's film Jolliya Iruntha Oruthan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜாலியா இருந்த ஒருத்தன் டீசர் வெளியீட்டுத் தேதி!

மீண்டும் புதிய போஸ்டர்... தனுஷ் - 55 அப்டேட்!

மதுரையைப் பின்னணியாகக் கொண்ட கதையில் ஜீவா!

வசந்த பாலன் இயக்கத்தில் ஜீவா, அஞ்சலி?
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


