பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வேண்டுமென்றே ஆபாசமாக எடுத்திருக்க மாட்டார்கள்..! பெத்தி பட சர்ச்சைக்கு கங்கனா ரணாவத் பதில்!

அரசியல்வாதியும் நடிகையுமான கங்கனா ரணாவத் பெத்தி படத்தின் சர்ச்சை பற்றி கூறியிருப்பதாவது...

News image

கங்கனா ரணாவத் - படம்: எக்ஸ் / கங்கனா ரணாவத்.

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

அரசியல்வாதியும் நடிகையுமான கங்கனா ரணாவத் பெத்தி படத்தின் சர்ச்சை பற்றி, “பெண்கள் எப்போதுமே படப்பிடிப்பில் தங்களக்குப் பிடிக்காத ஒன்று நடைபெறும்போது தனது பார்வையை முன்வைக்க வேண்டும்” எனக் கூறியிருப்பதாவது கவனம் பெற்றுள்ளது.

சமீபத்தில் புச்சி பாபு சனா இயக்கிய பெத்தி திரைப்படம் வெளியானது. இதில் நடிகை ஜான்வி கபூர் மோசமாக சித்தரிக்கப்பட்டதாகவும் ஆபாச பொருளாகக் காட்சிப் படுத்தப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விமர்சனங்களுக்கு இயக்குநர் புச்சிபாபு சனா வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். அந்தக் காட்சிகளில் மாற்றம் செய்வதாகவும் கூறியிருந்தார். இது குறித்து பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றன.

பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரணாவத் தற்போது பாரத பாக்ய விதாதா (Bharat Bhhagya Viddhaata) என்ற புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் பெத்தி படத்தின் சர்ச்சை குறித்து கூறியிருப்பதாவது:

திரைப்படம் என்பது பல வகையான பார்வைகள் ஒன்று சேர்வது. ஒரு காட்சிக்கு நீங்கள் ஒளி தரலாம். பெண்களை ஆபாசமாகக் காட்ட எடுத்திருக்க மாட்டார்கள். ஏனெனில் யாருமே வேண்டுமென்றே அப்படி நினைக்கமாட்டார்கள்.

அவர்கள் அந்த நோக்கத்துடன் எடுத்த மாதிரி தெரியவில்லை. அதனால், பெண்கள் படப்பிடிப்பின்போதே ‘இது சரியாக இல்லை’ என தங்களது பார்வையைக் கூற வேண்டும். பொதுவாக பலரும் ’நாங்கள் அப்படி நினைக்கவில்லை’ என உங்களுடன் ஒத்துப்போவார்கள்.

பல ஆண்கள் ஓர் அறையில் உட்கார்ந்து எழுதும்போது, இவ்வளவு மோசமாக இருக்குமென நாங்கள் நினைப்பதில்லை. இது மாதிரி நடந்துவிடுவதுண்டு. படத்தில் வேலை செய்யும்போது நீங்கள் ஏற்றுக்கொண்டு நடிக்கிறீர்கள் எனில் இது ஒரு கூட்டுமுயற்சிதான் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.