நடிகை கங்கனா ரணாவத் மத்திய அமைச்சருடனான காதலா என்கிற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத் பல பாலிவுட் படங்களில் நடித்து இந்தியளவில் பிரபலமானவர். தமிழில் தாம்தூம் திரைப்படத்தில் நடித்தும் கவர்ந்திருந்தார்.
நடிப்பில் பெரிய வரவேற்பைப் பெற்றவருக்கு அரசியல் ஆர்வமும் இருந்ததால் பாஜகவில் இணைந்து மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவைத் தொடர்களில் தன் கருத்துகளை முன்வைப்பத்துடன் அரசியல் ரீதியான சர்ச்சைகளுக்கும் பதிலளித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மத்திய உணவு பதப்படுத்தல் தொழில்கள் அமைச்சரான சிராக் பஸ்வானும் கங்கனாவும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டு வந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

கங்கனா ரணாவத், சிராக் பஸ்வான்
தற்போது, மத்திய அமைச்சர் சிராக் உடன் காதலில் உள்ளதாகக் கூறப்படுகிறதே? என்கிற கேள்விக்கு கங்கனா மறுப்பு தெரிவித்ததுடன், “எனக்கு அவரை 10 ஆண்டுகளாகத் தெரியும். நாங்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் (மிலே நா மிலே ஹம்) நடித்திருக்கிறோம். இருவருக்குமான உறவு முற்றிலும் நட்பில் அடிப்படையிலானது மட்டுமே. நாங்கள் சகஜமாக பழகக்கூடிய நண்பர்கள்தான். எங்களுக்குள் எந்தக் காதலும் இல்லை. அப்படி ஏதாவது இருந்திருந்தால் அது முன்பே தெரிந்திருக்கும்” எனக் கூறியுள்ளார்.
Summary
Actress Kangana Ranaut has responded to the question regarding a romantic relationship with a Union Minister.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எப்பவும் தனி வழிதான்: தனுஷ்

ராகுல் பேசுவதைக் கேட்பதே தலைவலியாக இருந்தது! கங்கனா ரணாவத்

எனக்கும் துல்கருக்கும் பிரச்னையா? டொவினோ தாமஸ் பதில்!

”ராகுலின் நடவடிக்கை அசௌகரியமளிக்கிறது!” பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

