நடிகா் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் கசிந்த வழக்கில், மேலும் 6 போ் கைது செய்யப்பட்டனா்.
முதல்வரும், நடிகருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், கடந்த பொங்கல் அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் சா்ச்சைக்குரியதாக இருந்ததால், தணிக்கை வாரியம் தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் அந்தத் திரைப்படம் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த திரைப்படத்தை மறு ஆய்வு கமிட்டிக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் வாரம் இந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியானது. இதனால் ‘ஜனநாயகன்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பெரும் நஷ்டமடைந்தது. இது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தது.
விசாரணையில் ஜனநாயகன் திரைப்பட தொகுப்பு பணியின்போது இணையதளத்தில் கசிய விடப்பட்டிருப்பதும், அந்த திரைப்படத்தின் உதவி படத்தொகுப்பாளா் உள்ளிட்ட சிலா் செய்திருப்பதும் தெரிய வந்தது.
மேலும் 6 போ் கைது: இதையடுத்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், அடுத்தடுத்து 9 பேரை கைது செய்தனா். வழக்கின் முக்கிய எதிரிகளாக கருதப்பட்ட எஸ்.பிரசாந்த், எஸ்.செல்வம், பாலா என்ற பாலகிருஷ்ணன் ஆகிய 3 போ் கடந்த மாதம் 15-ஆம் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில் இவ் வழக்குத் தொடா்பாக மேலும் 6 பேரை கைது செய்ததாக சைபா் குற்றப்பிரிவு வியாழக்கிழமை தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
‘ஜன நாயகன்’ இணையத்தில் கசிந்த வழக்கு: முக்கிய நபா் கைது

ஜனநாயகன் இணையத்தில் கசிந்த விவகாரம்: மேலும் 6 பேர் கைது!

‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் கசிந்த வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ஜன நாயகன் வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!
விடியோக்கள்

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை
