நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புத்த கோயில் பற்றி பகிர்ந்த பதிவில், “அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்றைக் கண்டேன்” எனக் கூறியுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த நடிகை நடிகை மாளவிகா மோகனன் (32 வயது) தமிழில் மாஸ்டர் படத்தில் அறிமுகமானார். பின்னர், தங்கலான், ஹிருதயப்பூர்வம் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, மாளவிகா சர்தார் 2, பாக்கெட் நாவல் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவரது பயணம் குறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய புத்த கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமான போரோபுதூர் கோயில் இருக்கிறது. இது குறித்து மாளவிகா கூறியிருப்பதாவது:
உலகின் மிகப்பெரிய கோயிலான போரோபுதூருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பாகச் சென்றிருந்தேன். அங்கு சூரிய உதயம் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்குமெனக் கூறினார்கள். அதனால், டூரிஸ்ட் எங்களை சீக்கிரமாக அழைத்துக்கொண்டு சென்றார்.
பொதுவாக காலையில் எழாத என்னை விடியற்காலை 4 மணிக்கே எழுப்பி, அந்த அழகான கோயிலைக் காண அழைத்துச் சென்றார்கள். உண்மையில் அந்த முயற்சிக்குத் தகுதியாக இருக்க வேண்டுமென விரும்பினேன்.
காலையில் நான் பார்த்தது, அற்புதத்திற்குச் சற்றும் குறைவில்லாதது. செழிப்பான வெப்பமண்டலக் காடுகள் சூழ்ந்திருக்க, அனைத்து பக்கமும் பல்வேறு எரிமலைகள் சூழ்ந்திருக்க சூரியனின் முதல் ஒளியில் அந்தக் கோயில் மெதுவாக வெளிப்படுகிறது. அதனால், மிகவும் நம்பமுடியாத அளவுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
என்னுடைய மற்ற பயணங்களில் இதுமாதிரியான நிலப்பரப்பை பார்த்தேனா என நினைவடுக்களில் இருந்து தேடிப் பார்க்கிறேன். எந்த இடமும் இதற்கு அருகில்கூட வரவில்லை.
போரோபுதூர் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதை அறிந்தேன். அந்தக் கோயிலின் ஒவ்வொரு கட்டமும் ஆன்மிகத்தை நோக்கிய பயணமாக இருக்கிறது. அந்தக் கணத்தில் யாருமில்லாமல் கோயிலில் சுற்றுவது தனிப்பட்ட விதத்தில் விவரிக்க முடியவில்லை.
என்னுடைய பயணத்தில் பிடித்தமான ஒன்றாக சேமித்து வைக்கக்கூடியதாக மாறியுள்ளது. எனது ஆடையை தயாரித்த நிறுவனத்துக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.
Summary
Nothing short of magical Malavika says about Buddhist temple
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

த்ரிஷாவுக்கு என்னதான் ஆச்சு? நலமாக 36 ஆண்டுகள் ஆகுமாம்...

பாக்கெட் நாவல் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்!

வருத்தமாக இருக்கிறது..! ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஆயுஷ் மாத்ரேவின் பதிவு!

கோலிவுட் ஸ்டூடியோ!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

