நடிகை ஹரிகா சாது பிரதான நடிக்கும் மணமகளே வா தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
திருமகள் தொடரில் நாயகியாக நடித்த ஹரிகா சாது நடிக்கும் தொடரான மணமகளே வா தொடர், கடந்த 2024 ஜூலை 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மணமகளே வா தொடரானது, 500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில், விக்கி ரோஷன் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்தத் தொடரில் லோகேஷ் பாஸ்கர், லட்சுமி, ஜெயந்தி நாராயணன், சுவேதா, அணு, டேவிட் ராஜா, நிரஞ்சனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

மணமகளே வா தொடரின் நிறைவு நாள் புகைப்படங்கள். - படம்: இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில், மணமகளே வா தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகை ஹரிகா சாது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணமகளே வா தொடரின் நிறைவு நாள் புகைப்படங்கள். - படம்: இன்ஸ்டாகிராம்
மணமகளே வா தொடரின் விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடருக்குப் பதிலாக, புதிய தொடரான துளசி தொடர் ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Filming for the series Manamagale Vaa, starring actress Harika Sadu in the lead role, has been completed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

வேட்பாளா்களின் இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

நிறைவடையும் ஹரிகா சாதுவின் மணமகளே வா தொடர்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


