கருப்பு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மதுரையில் நடைபெறவுள்ளது.
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மே. 14 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “கருப்பு”. இப்படத்தின் 3 பாடல்கள் கவனம் ஈர்த்துள்ளதால் சூர்யாவின் பக்கா கமர்சியல் படமாக இது இருக்கும் என அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும், கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி போல் இருக்குமென இயக்குநர் ஆர்ஜே பாலாஜி கூறியிருந்தது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஏப். 26 ஆம் தேதி மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
வழக்கமாக சென்னையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழா இம்முறை மதுரையில் நடைபெறுவது ஏன் என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், இப்படம் முழுக்கவே கருப்புசாமியை மையப்படுத்தி இருப்பதே மதுரையில் விழாவை நிகழ்த்த காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கருப்புசாமியை பிரதிபலிக்கும் விதமாக சூர்யா சுருட்டு பிடிக்கும் காட்சிகளும் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
The audio launch ceremony of the film Karuppu is set to take place in Madurai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

8 நாளில் கருப்பு வெளியீடு! புதிய போஸ்டர்!
கருப்பு டிரைலர் அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!
கருப்பு இசை வெளியீட்டு விழா!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

