உலகப்புகழ் பெற்ற மைக்கல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
உலகில் எங்கெங்கு என்ன இசைகள் இருக்கின்றன எனத் தெரியாத காலத்திலேயே 1980-களிலிருந்து ஒட்டுமொத்த உலகின் பெரும்பகுதியைத் தன் பக்கம் ஈர்த்தவர் மைக்கல் ஜாக்சன். ஆல்பம் என்றால் என்ன? நடனமும் இசையும் பாடலுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை தன்னுடைய அசாத்திய குரல் மற்றும் நடனத்திறனால் வியக்க வைத்த மைக்கல் ஜாக்சன் 2009 ஆம் ஆண்டு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஜாக்சனின் மறைவு அமெரிக்காவுடன் நின்றுவிடவில்லை. உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் ஜாக்சனுக்காக கண்ணீர் விட்டனர். இந்த நூற்றாண்டில் மைக்கல் ஜாக்சன் அளவுக்கு ரசிகர்களை ஈர்த்த இன்னொரு கலைஞர் இல்லையென்பதே உண்மை. இன்று இன்ஸ்டாகிராமில் மைக்கல் இருந்திருந்தால் அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்ட முதல் பிரபலம் ஆக இருந்திருப்பார்.
தற்போது, மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கையை, ‘மைக்கல்’ என்கிற பெயரில் படமாக எடுத்துள்ளனர். அவரின் கதாபாத்திரத்தில் ஜாபர் ஜாக்சன் (மைக்கல் ஜாக்சனின் உறவினர்) நடித்துள்ளார்.

அன்டொய்ன் ஃபகா இயக்கத்தில் உருவான இப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் இன்று உலகம் முழுவதும் வெளியானது. ஆனால், இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் மிகப்பெரிய பயோபிக் படங்களில் இதுவே சுமாரானது என்றும் விமர்சனங்கள் வந்துள்ளன.
மேலும், சிலர் மைக்கல் ஜாக்சனின் போராட்டத்தையும் வேட்கையும் நன்றாகக் காட்டியிருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் இப்படம் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The biopic of the world-famous Michael Jackson has been released in theaters today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல்ஐகே - ஓடிடியிலாவது வரவேற்பு கிடைக்குமா?

ரூ. 2000 கோடி வசூலித்த மைக்கல்!

சர்தார் - 2 என்ன ஆனது?
கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

