நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் புரி ஜெகன்னாத்தை வாழ்த்தியுள்ளார்.
தெலுங்கு திரைப்படத் துறையில் தனித்துவமான இயக்குநர் எனப் பெயரெடுத்தவர் புரி ஜெகன்னாத். ஆக்சன் திரைப்படங்களை இயக்கி பெரிய வெற்றியைப் பெற்றவர். இதுவரை 35-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் உருவான அப்பு (கன்னடம்), போக்கிரி, பிஸ்னஸ்மேன் (தெலுங்கு) ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றதுடன் வசூலிலும் அசத்தின. போக்கிரி தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இறுதியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவை வைத்து லைகர் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் தோல்விப்படமானது. தற்போது, நடிகர் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து ஸ்லம்டாக் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், சினிமாவில் புரி ஜெகன்னாத் 26 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதற்காக பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதியும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”என்ன ஒரு பயணம்! சினிமாவில் 26 ஆண்டு காலம் என்பது வெறும் மைல்கல் அல்ல. இது தையரியமும், பயமற்ற குரலாலும் கட்டமைக்கப்பட்ட சாம்ராஜ்யம். அன்பிற்கினிய புரி சார், உங்களுடன் ஸ்லம்டாக் படத்தில் பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நடிகர்களான நாங்கள் எங்களை நம்பும் இயக்குநர்களை நோக்கியே இருக்கிறோம். நீங்கள் அதனைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறீர்கள். இந்தத் திரைப்படம் இதனைச் சார்ந்த அனைவருக்கும் நினைவுகூறும்படியானதாக இருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து உங்கள் கதைகள் வெல்ல வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Vijay Sethupathi has congratulated Director Puri Jagannadh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தள்ளிப்போகும் மணிரத்னம் - விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு?

மாற்றம் யாரிடமிருந்து தொடங்க வேண்டும்? வாக்களித்த பிறகு இயக்குநர் அமீர் கேள்வி

எரிவாயு தட்டுப்பாடு? கத்தார் செல்கிறார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!
அரசனில் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


