கருப்பு திரைப்படம் பக்கா கமர்சியலாக எடுக்கப்பட்டுள்ளதாக ஆர். ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகவுள்ள திரைப்படம் “கருப்பு”. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.
நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கும் இப்படத்தில் நடிகர்கள் த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படம் வரும் மே. 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி, “உலகமே கடினமான நிலைமையில் போராடிக்கொண்டிருக்கும் போது, ஒருவேளை சூப்பர்ஹீரோ வந்து இந்தத் துயரங்களைத் தீர்த்தால் எப்படி இருக்கும்? இப்படியான பின்னனியில் பக்கா கமர்சியல் பாணியில் தீயசக்திகளை முறியடித்து தெய்வீகத்தை நிலைநிறுத்தும் கதையாகவே கருப்பை உருவாக்கியிருக்கிறோம். இதில் நடிகர் சூர்யா சூப்பர்ஹீரோவாக இருந்து மக்களின் பிரச்னையைத் தீர்த்து வைக்கிறார்.
படத்தை எடிட் செய்யும்போது சூர்யா சாரின் கண்களும், திரை இருப்பும் பிரமாதமாக இருந்தைப் பார்த்தேன். ஒரு நட்சத்திர நடிகருக்கு அதுதான் அடையாளம். 10 பேர் உள்ள கூட்டத்திலும் சூர்யா தனியாகத் தெரிவார். ” எனக் கூறியுள்ளார்.
Summary
R.J. Balaji has stated that the film Karuppu has been made as a thoroughly commercial movie.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!
கருப்பு டிரைலர் அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!

நம்ம பாட்டனோட பாட்டு... வெளியானது கருப்பு படத்தின் பாடல்!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

