திர்ச்சி டோபிவாலே பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக துரந்தர் 2 படத்தின் மீது திரிமூர்த்தி ஃபிலிம்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில், நடிகர்கள் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிடோர் நடிப்பில் மார்ச் 19-ல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமரிசன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் துரந்தர் 2.
இந்த நிலையில், 1989-ல் வெளியான திரிதேவ் படத்தின் திர்ச்சி டோபிவாலே பாடலை, அனுமதியின்றி துரந்தர் 2 படத்தில் பயன்படுத்தியிருப்பதாக துரந்தர் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான பி62 ஸ்டூடியோஸ் மீது திரிமூர்த்தி ஃபிலிம்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆனந்த் பக்ஷி எழுதிய திர்ச்சி டோபிவாலே பாடலை, கல்யாண்ஜி - ஆனந்த்ஜி இசையமைப்பில் அமித்குமார் - சப்னா முகர்ஜி பாடியிருந்தனர்.
துரந்தர் 2 படத்தில் ரங் தே லால் பாடலில்தான் திர்ச்சி டோபிவாலேவின் வரிகளையும் சேர்த்து, புதிய வரிகள் மற்றும் புதிய குரலிசையும் சேர்த்திருப்பதாகவும் பதிப்புரிமையை மீறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இந்தப் பாடலைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவும், அதனுடன் இழப்பீடு வழங்கவும் திரிமூர்த்தி ஃபிலிம்ஸ் கோரியுள்ளது.
Summary
Aditya Dhar In Legal Trouble Over Use Of ‘Tirchi Topiwale’ Song In Dhurandhar 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜப்பான் மொழியில் வெளியாகும் துரந்தர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

துரந்தரில் சாரா அர்ஜுன் எப்படி தேர்வானார்?

ரூ.1,088 கோடி வசூலித்து வரலாறு படைத்த துரந்தர் தி ரிவென்ஞ்ச்..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

துரந்தர் தி ரிவென்ஞ் ரூ. 500 கோடி வசூல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

