நடிகர் பிரகாஷ் ராஜ் மீது சமீபத்தில் மத ரீதியான விமர்சனங்கள் எழுந்ததுக்கு பதிலளித்துள்ளார். இந்தப் பதிலுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
சமீபத்தில், நடிகர் பிரகாஷ் ராஜின் அன்னை சுவர்ணலதா (86 வயது) உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் காலமானார். அவரது அன்னையின் விருப்பப்படி பிரகாஷ் ராஜ் கிறிஸ்தவ முறையின்படி சடங்கு செய்தார்.
பிரகாஷ் ராஜ் பொதுவாகவே கடவுள் நம்பிக்கை அற்றவர். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி இதுகுறித்து பதிவிட்டு வருவார். இப்படியான நிலையில், அவர் தனது அம்மாவிற்காக செய்த செயலை சிலர் விமர்சித்து கேலி செய்து வந்தனர்.
சோட்டா டான் மற்றும் தி ஜெய்பூர் டயலாக்ஸ் எனும் பக்கத்தில், “நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எனக் கூறுகிறார். ஆனால், கிறிஸ்தவ முறைப்படி அவரது அம்மாவுக்கு சடங்கு செய்கிறார்” என கேலி செய்து விடியோ வெளியிட்டிருந்தது.
பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இதனைப் பகிர்ந்து , “ஆமாம். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், என் அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அவரது நம்பிக்கை மறுக்க நான் யார்? அவரது நம்பிக்கையின் படி புதைக்க உரிமை இருக்கிறது. மற்றவருக்கு நாம் அளிக்க வேண்டிய அடிப்படை மரியாதை இதுதான். இதெல்லாம் மத ரீதியான தாக்குதல் நடத்துபவர்களுக்குப் புரியுமா? எனப் பதிவிட்டுள்ளார்.
பிரகாஷ் ராஜின் இந்தப் பதிவினை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
Summary
Prakash Raj Hits Back At Trolls Over Christian Burial For Mom: 'I Don't Believe In God'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுநரின் நடத்தை அருவருக்கத்தக்கது! விஜய்க்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் பதிவு
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!

சினிமாவில்தான் ஒரே பாட்டில் முதல்வர் ஆகலாம்.. பிரகாஷ் ராஜ் பிரசாரம்

தந்தைகளுக்குச் சமர்ப்பணம்..! வரவேற்பைப் பெறும் ஜிவியின் ஹேப்பி ராஜ்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


