கேஜிஎஃப், காந்தாரா, சலார் ஆகிய படங்களை தயாரித்துள்ள ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பஹீரா படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் டாக்டர் சூரி இயக்குகிறார்.
யார் இந்த இயக்குநர் டாக்டர் சூரி?
கேஜிஎஃப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீலின் பஹீரா கதையை இயக்கியுள்ளார் இயக்குநர் டாக்டர் சூரி. தில்லியில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். எலும்பு அறுவைச் சிகிச்சைப் பிரிவில் மேற்படிப்பும் முடித்துள்ளார்.
சினிமா மீதான ஆர்வத்தினால் 2012இல் நடிகர் யஷ்ஷை வைத்து லக்கி எனும் படத்தினை இயக்கியுள்ளார்.
இவர், பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் உருவான சலார் -1 படத்தில் வசனம் எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஸ்ரீமுரளி?
இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்துள்ளார். இவர் பிரசாந்த் நீலின் தங்கையை திருமணம் செய்துள்ளார். பிரசாந்த் நீலின் முதல் படத்தின் (உக்ரம்) நாயகனும் இவர்தான்.
கன்னடாவில் கண்டி, உக்ரம் ஆகிய படங்களின் மூலம் மிகவும் கவனம் பெற்ற நடிகராக அறியப்படுகிறார் ஸ்ரீமுரளி.

பிரசாந்த் நீல் உடன் நடிகர் ஸ்ரீமுரளி.
ரிலீஸ் தேதி
கே.ஜி.எஃப் படத்தின் மேக்கிங் சாயல் படத்தின் டீசரில் காண முடிகிறது. ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்தால் அது சிறப்பான படமாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்தப் படம் வரும் அக்.31ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
பஹீரா படத்தின் போஸ்டர். - படம்: ஹொம்பாலே ஃபிலிம்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிங்கீதம் சீனிவாச ராவ் படத்தின் டீசர்!
என்டிஆர் - நீல் பட வெளியீடு ஓராண்டு தள்ளிப் போகிறது!

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை



