சன் தொலைக்காட்சி தொடரான 'கயல்' தொடரில் நடித்துவந்த நடிகை சுபாஷினி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த நடிகை சுபாஷினி(இயற்பெயர்: சாஷ்வி பாலா, வயது 36) சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது கணவர் பிப்பின் பெங்களுரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
பெங்களூருவில் தங்கிவந்த சுபாஷினி, படப்பிடிப்பு காரணமாக கடந்த ஏப். 3 ஆம் தேதி சென்னை வந்துள்ளார். நேற்று கணவருடன் விடியோ காலில் பேசும்போது வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி கணவர் விடியோ காலில் இருக்கும்போதே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக, சுபாஷினியின் கணவர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் வந்து உடலை மீட்டு தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.
கடந்த 2024 ஏப்ரல் மாதம் சுபாஷினிக்கு திருமணம் நடைபெற்றது. சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சுபாஷினியின் தற்கொலை தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் சின்ன திரை நடிகர், நடிகைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
Summary
Kayal Serial Actress subashini Commits Suicide
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று முதல் ஒளிபரப்பாகும் தாய் மாமன் சீரியல்! தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

கோடை விடுமுறைக்கு லண்டன் சென்ற நடிகை மதுமிதா!

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய தமிழ் சீரியல் நடிகை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

