வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026 ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
கிரகநிலை
இதுவரை உங்களது தைரிய வீரிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி சுக ஸ்தானத்திற்கு செல்கிறார்.
மூன்றாம் பார்வையால் ரண ருண ரோக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் ராசியையும் பார்க்கிறார்.
பலன்
தனுசு ராசி அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சியால் உங்களுக்கு வேண்டிய நற்பலனகளை யாராலும் தடுக்க முடியாது. சகோதரர்களின் உதவியால் பொருளாதார முன்னேற்றம் பெற நல்வழி உண்டு. எந்தப் பிரச்னைகளையும் எளிதாக எதிர்நோக்கும் மன தைரியத்தை பெறுவீர்கள். வீடு, மனை, வாகனம் போன்ற வகைகளில் தடங்கலும், அனுகூலமும் சம அளவில் இருக்கும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த சிறு சிறு மனஸ்தாபங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் விலகி விடும். சிறிய காய்ச்சலாக இருந்தாலும்கூட தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக அவசியம். மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் உதவியால் கடன் ஓரளவு சரி செய்யலாம்.
உத்தியோகஸ்தர்கள்
கடந்த சில காலமாக அனுபவித்து வந்த பிரச்னைகளிலிருந்து முழுமையாக விடுபட வேண்டிய கால கட்டம். தொலைதூர நாடுகளிலிருந்து வரும் செய்திகள் திக்குமுக்காட வைக்கும். அன்றைய வேலையை அன்றே செய்து முடிப்பீர்கள். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரும். மேலதிகாரிகளை அவமரியாதை செய்து விடாதீர்கள்.
தொழிலதிபர்கள்
வருமானம் உயரும். சகோதர வகையில் பிரச்னைகள் இருந்தால் சரி செய்வது உத்தமம். வெளிநாட்டு வகையில் தொழில் செய்பவருக்குக் கூடுதல் முதலீடு செய்தால் மட்டுமே நல் ஆதாயத்தைக் காண முடியும். எந்த ஆவணங்களாக இருந்தாலும் படித்து பார்த்துக் கையெழுத்திடுவது நல்லது.
பெண்கள்
அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிபுரிந்து அதற்கான வெகுமதியை பெறுவார்கள். உடல் நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ஆரோக்கியத்தை பெறமுடியும். குடும்ப நிர்வாகம் கவனிக்கும் பெண்கள், பணக் கஷ்டம் எதுவுமின்றி சிறந்த முறையில் குடும்பத்தை நிர்வகிப்பார்கள்.
கலைஞர்கள்
அதிர்ஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய கால கட்டம். ஆபரணச் சேர்க்கை உண்டு. பணம் பலவகைகளிலும் வரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உடனிருப்போரின் தொந்தரவு இருக்கும், அதிக கவனம் தேவை.
அரசியல்வாதிகள்
வழக்கு, விவாதங்களில் கவனம் தேவை. உங்களின் நம்பிக்கைக்குரியவர்கள் மீது சந்தேகம் வரலாம். ஆனால் அது உண்மை இல்லை என்று தெரிய வரும். சிலர் மீது கோபப்பட வேண்டி வரும். கோபத்தைக் கட்டுப்படுத்தினால் மகிழ்ச்சி அடையலாம்.
மாணவர்கள்
தங்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். கூடாத சேர்க்கைகள் குறுக்கிட்டு மனக்குழப்பத்தை தரும் வாய்ப்பு உள்ளதால் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். தந்தையுடன் நல்ல ஒற்றுமையுடன் இருக்கும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.
மூலம்
இந்த சனிப் பெயர்ச்சியால் சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும்.
பூராடம்
இந்த சனிப் பெயர்ச்சியால் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.
உத்திராடம் 1ம் பாதம்
இந்த சனிப் பெயர்ச்சியால் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும்.
பரிகாரம்
ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (20.06.2026) - தனுசு
இன்றைய ராசி பலன் (19.06.2026) - தனுசு
இன்றைய ராசி பலன் (18.06.2026) - தனுசு
இன்றைய ராசி பலன் (17.06.2026) - தனுசு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

