
நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 4
எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
ராகுவை நாயகானாகக் கொண்ட நான்காம் எண் அன்பர்களே இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். பேச்சில் நிதானம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் அடையும். குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும்.
பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இடமாற்றம், பதவி ஏற்றம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




